நாமலிற்கு துண்டு போட்டாயிற்று?



ராஜபக்ஸ குடும்ப மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில் அடுத்து கதிரைகளிற்கான முன்பதிவுகள் ஆரம்பித்துள்ளது.

நாமல் ராஜபக்சவை  பிரதமராக நியமிக்கவேண்டும்  என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பிரதமர் நிதிஅமைச்சர் பதவியிலிருந்து விலக இணங்கினார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச  கவனம் செலுத்தி வருகின்றார் .

நாடு முழுவதுமாக திறக்கப்படும்போது துரித அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் திறமை வாய்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கவேண்டும் என ஜனாதிபதி விரும்புகின்றார் .

மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதையும் சில அமைச்சுகளின் செயற்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதையும் ஜனாதிபதி கருத்தில் எடுத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறப்பாக செயற்படாத சிரேஸ்ட அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம் அல்லது முக்கியத்துவமற்ற பதவிகள் வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திறமையான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாமல்ராஜபக்சவை  பிரதமராக நியமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையே அமைச்சரவை மாற்றம் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்ததை விட குறுகிய காலத்தில் இது இடம்பெறும் என தெரிவித்துள்ளன.

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்கவேண்டும்  என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பிரதமர் நிதிஅமைச்சர் பதவியிலிருந்து விலக இணங்கினார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்

No comments