மீண்டும் வடக்கு ஆளுநர் கதிரை சர்ச்சை?வடமாகாண ஆளுநர் இடமாற்றம் தொடர்பில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.

யாழிலுள்ள அரச ஆதரவு அரசியல்வாதிகளை வெட்டியோட முற்படுகின்ற வடக்கின்ற தற்போதைய ஆளுநர் இடமாற்றப்படுவதாக செய்திகள் கசியவிடப்படுவதும் அதற்காக அவர் ஊடகங்களுடன் கோபித்துக்கொள்வதும் வழமை.

இந்நிலையில் அரசியல் பின்னடைவுகளையடுத்து அரச நிர்வாக சேவையில் அதிரடி மாற்றங்களைச் செய்ய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் இடமாற்றப்பட்டு புதியவர் நியமிக்கப்படவுள்ளார் என இன்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனது ஓய்வு காலமுண்டு.கொழும்பில்,வவுனியாவில் பங்களாவுண்டு என வாழ்ந்துவருகின்ற ஆளுநரை கதிரையிலிருந்து தூக்க ஆளும் தரப்பின் பங்காளிகளே முண்டியடிக்கின்ற நிலையில் இச்செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனிடையே வெற்றிடமாகவுள்ள வடமாகாண பிரதம செயலாளர் கதிரைக்கு க.தெய்வேந்திரம் எனும் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளராக இருந்த தெய்வேந்திரம் தற்போதைய ஆளுநராலேயே கொழும்பிற்கு துரத்தியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments