மீண்டும் ஈழத்திலும் கருணாநிதி பாணி கடிதங்கள்மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிரச்சினைகளை நமுத்து போக வைக்க கடிதமெழுதுவதில் பிரபலமானவர்.

நடவடிக்கை எடுக்கப்படுகின்றதோ இல்லையோ அதனை ஊடகங்களில் வரச்செய்து பிரபலம் தேடிக்கொள்வார்.

அந்த பாணி கடிதங்கள் தற்போது தமிழ் அரசியல் பரப்பிலும் வரத்தொடங்கியுள்ளது.

வடமாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு வடமாகாண சபையின் அவைத்தலைவர்,  முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடமாகாணத்திற்கு புதிய பிரமத செயலாளராக சமன் பந்துலசேன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடியிருந்தனர்.


இதன்போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 


No comments