கால் இறாத்தல் பாண்:ஒரு வாழைப்பழமும்!கொழும்பில. ஐகதான தொழிற்சங்கவாதிகளிற்கு நேற்றிரவு வெறும் கால் இறாத்தல் பாண் கொடுத்து படிப்பிக்க தொடங்கியுள்ளது கோத்தா அரசு.

மாணவர்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட ஆர்வலர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் அணிய உடைகள் இல்லாததால், இவர்களில் பெரும்பாலோர் கட்டில்களில் போட்டிருந்த போர்வைகளைபெட்சீட்) அணிந்திருக்கிறார்கள்.

நேற்று இரவு 10.30 மணி வரை இவர்களுக்கு உணவு இல்லை. பின்னர் கால்இறாத்தல் பாண் மற்றும் ஒரு வாழைப்பழம் கொடுக்கப்பட்டது .இதனிடையே ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் மீதான அத்துமீறல்களைக் கண்டிக்கின்றோம் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.


No comments