மேதகு :சிங்களத்திலும் தேவை!



ஈழத்தமிழர்களின் அவலத்தையும் அதனால் எழுந்த போராட்டத்தையும் புனைவுகள் இன்றி வெளிப்படுத்தி நிற்கின்றது மேதகு திரைப்படம். 

சிங்கள மொழியிலும் வெளிவரவேண்டும். தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை சிங்கள மக்கள் முற்றுமுழுதாக உணர்ந்துகொள்வதற்கு இது உதவியாக இருக்கும்  என கோரிக்கை விடுத்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் பொன்ராசா.

தமிழினத்தின் வரலாற்றை தமிழக கலைஞர்கள் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கின்றனர்.

தமிழக படைப்பாளர்களிடமும் தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களிடமும் ஈழத்தமிழர்கள் தொடர்பாக தெளிவான பார்வை உள்ளது. 

கடந்த காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக அவர்கள் பல்வேறு வழிகளில் போராடி இருக்கின்றனர். ஈழத்தமிழர்களுக்காக தமிழக உறவுகள் பலர் அங்கு உயிர்த்தியாகம் செய்திருக்கின்றனர். 

தமிழர்களின் போராட்டத்தை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈழத்தமிழர்களை விட தமிழக மக்கள் தீவிரமாக உள்ளனர். 

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் உட்பட தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேலும் பல நினைவுச் சின்னங்கள் இதற்கு சான்று பகரும். 

இப்போது, மேதகு திரைப்படம் மூலம் தமிழ் மக்களின் போராட்ட நியாயத்தை தமிழக கலைஞர்கள் உள்ளதை உள்ளபடியே அரங்கிற்கு கொண்டுவந்துள்ளனர். 

இத்திரைப்படத்தின் இயக்குநர் கிட்டுவுக்கும் கலைஞர்கள் மற்றும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.  

மேதகு இயக்குநர் கிட்டு மற்றும் படக்குழுவினரிடம் வெளிப்படையான கோரிக்கை, 

இத்திரைப்படம் சிங்கள மொழியிலும் வெளிவரவேண்டும். தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை சிங்கள மக்கள் முற்றுமுழுதாக உணர்ந்துகொள்வதற்கு இது உதவியாக இருக்கும். 

இதன்மூலம் தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் சிங்கள மக்களை சிந்திக்கவைக்க முடியும்.

No comments