யாழில் அதற்கு பஞ்சமேயில்லை!தொண்டைமானாறு கடற்பரப்பில், படகு ஒன்றில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூவர், இன்று (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 6 சாக்குகளில் பொதியிடப்பட்ட சுமார் 250 கிலோ கிராம் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு படகு ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்பட்ட போதே  அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் வளலாயைச் சேர்ந்த 22, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

No comments