ஆஃப்கானிஸ்தான் பேச்சுவார்த்தையில் களமிறங்கியது சீனா!

 


அமெரிக்க-நேட்டோ கூட்டணிப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவரும் நிலையில்
ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் பிரிவினருடன் சீனா சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளது.

சீனாவின் தியான்ஜின் (Tianjin) நகரில், 9 பேர் அடங்கிய தாலிபான் குழுவை வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) சந்தித்தார்.ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க-நேட்டோ படைகள் வெளியேறியது, அமெரிக்கக் கொள்கைகளின் தோல்வியைக் குறிப்பதாய்த் திரு வாங் கூறினார். ஆஃப்கானிஸ்தானின் எதிர்காலத்தில் தாலிபான் பிரிவினருக்கு முக்கிய பங்குள்ளதாய்ப் பெய்ச்சிங் தெரிவித்தது.

அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் முக்கிய பங்காற்றுவதற்கு முயற்சி செய்யும்படி, தாலிபான் பிரிவினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளதோடு .கிழக்கு துர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கத்துடனான உறவைத் துண்டித்துக்கொள்ளும்படியும் திரு வாங் வலியுறுத்தியுள்ளதாக பன்னாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது-


No comments