கொத்தலாவையும் ஆகஸ்ட் 6வருகின்றது!தாங்கள் நினைத்ததை அரங்கேற்றிவிடுவது ராஜபக்ச குடும்ப போக்காகியிருக்கின்றது.

இதன் ஒரு அங்கமாக  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கான வரைவு சட்டம் அமைச்சரவை ஆலோசனைக் குழுவில்  மேலும் பரிசீலிக்கப்பட்டு ஆகஸ்ட் 6 ஆம் திகதி பாராளுமன்றில்  விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று பத்தரமுல்லை ஜயவர்தனபுரவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே அமைக்கப்பட்ட தேசிய சந்தன பூங்கா நேற்;று (20) அமைச்சர் நாமல் ராஜபக்வால்;ஷ மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வழிக்காட்டலில் 2020 ஜூலை 20 ஆம் திகதி   தொடங்கப்பட்டன.

9 ஏக்கர் நிலத்தில்  பூங்காவில் 300 அரிதான சந்தன மரங்கள் மற்றும் 900 வெள்ளை சந்தன செடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இப் பூங்காவிற்கு நடுவில் 200,000 லீற்றர் நீர் கொள்ளக்கூடிய 11 நீர் தடாகங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  900 மல்லிகை தாவரங்கள் உள்ளன.  

இந்த சந்தரமரப்பூங்காவில் அழகான முறையில் வர்ண மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. 

 பொது மக்கள் தமது குடும்பத்தினருடன் ஓய்வு நேரத்தை களிப்பதற்கு இந்த பூங்கா அமையுமென வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.நாடக காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், நூல் வெளியீடு போன்றவற்றை நடத்த இங்கு சந்தர்ப்பம் உண்டு.  பாரிய இரண்டு நீர் தாங்கிகளுக்கு மத்தியில் கலையரங்கொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தேக அப்பியாசம், யோகா நிகழ்ச்சிகள், தியான நிகழ்ச்சிகளை நடத்தவும் இங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவகங்கள், 60 வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வாகன தரிப்பிடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் இங்குள்ளது. 

பொதுமக்களிடம் எவ்வித கட்டணமும் அறவிடாமல், அங்கு பிரவேசிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.No comments