பிழைக்கு வருந்துகிறேன்!! சுமந்திரன் குத்துக்கரணம்!


தனது டுவிட்டர் பதிவில் பதிவிடப்பட்ட நபரின் படம் சீன நாட்டவர் அல்ல என்றும் குறித்த பிழையான தகவலுக்கு வருந்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீள் டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ளார்.

அந்த மீள் டுவிட்டர் பதிவில்,

“ குறித்த நபர் சீன நாட்டவர் அல்ல எனவும் அவர் இலங்கையர் எனவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகிறேன். வடக்கில் பணிபுரியும் உண்மையான சீனர்களின் படங்கள் எதிர்காலத்தில் பதிவேற்றப்படும்” என குறிப்பிட்டு மீள் பதிவொன்றை செய்துள்ளார்.

No comments