வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த தம்பதியினர்!!


வெல்லவாய காவல்நிலையப் பிரிவுக்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலங்கள் நேற்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36 வயது ஆண் மற்றும் ஹெட்டிபொல பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் வெல்லவாய பகுதியில் உள்ள குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ள விடயம் விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என, காவல்துறையினர். சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments