பிரஞ்சு அதிபரை கன்னத்தில் அறை! இருவர் கைது!!


பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவல் மக்ரோன் இன்று செவ்வாய்க்கிழமைதென்கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்குப் பயணம் செய்தபோது,  வீதியில் நின்ற மக்களைச் சந்திக்கச் சென்றபோது வீதி தடுப்புக் கம்பியின் மறுபுறத்தில் நின்ற பொதுமக்களுக்கு கைலாகு கொடுத்த போது ஒருவர்  மக்ரோனின் கன்னத்தில் அறைந்துள்ளார். கன்னத்தில் அறைந்த பச்சை நிற ஆடை அணிந்த நபர் ''டவுன் வித் மக்ரோன்-இஸ்ம்" என்று கத்தினார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை அடுத்து இமானுவல் மக்ரோனை பாதுகாவலர்கள் இழுத்துச் சென்றனர். மறுபுறம் கன்னத்தில் அறைந்த நபரை தள்ளிவிட்டனர்.  கன்னத்தில் அறைந்தவரையும் இன்னொருவரையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். 

ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணியாற்ற மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றபின், டெய்ன்-எல் ஹெர்மிட்டேஜ் நகரில் பள்ளிக்கு வெளியே தடைகளுக்குப் பின்னால் காத்திருக்கும் பொதுமக்களை பிரெஞ்சு அதிபர் சந்திக்கச் சென்றார். அப்போது முன்வரிசையில் நின்ற நபர் கன்னதில் அறைந்தார்.

பொதுமகன் ஒருவர் கன்னத்தில் அறையும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.No comments