விடுதலை:பெயர் பட்டியல் தெரியவில்லையாம்? நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகளின் முன்னாள் போராளி சந்தேக நபர்கள்  17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டு பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

பொசன் பூரணையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், ஜனாதிபதியின் தீர்மானம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதியின் தீர்மானம் நாளை தமக்கு கிடைக்கும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய  தெரிவித்துள்ளார்.

No comments