வெசாக்கினை தொடர்ந்து நாகபூசணி திருவிழாவும் இல்லை!



தேசிய வெசாக் கொண்டாட்டங்களை நயினாதீவில் முன்னெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டிருந்த நிலையில் இறுதியில் கைவிப்பட்டது போன்று வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவமும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. 

நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நாளை மறுதினம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தது.  

நாட்டில் நிலவும் , கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடாத்த முன்னர் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் மகோற்சவத்தை பிற்போட தீர்மனித்து அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே நயினாதீவு ஆலயம் மூலம் பரவிய கொரோனா பரவலால் கணிசமான இந்து மதகுருமார் தொற்றிற்குள்ளாகியிருந்தனர்.அத்துடன் இரு மதகுருமார் மரணித்துமிருந்தனர்.

இதனிடையே பிறந்து ஒரு மாதத்திற்கு உள்ளிட்ட வயதுடைய மூன்று குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள பிறந்து 12நாளே ஆன குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியாகியுள்ளது.  

அதேவேளை யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாளே ஆனா குருநகர் பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றுக்கும் , தாய்க்கும் கொரோனா  தொற்று உறுதியாகியுள்ளது.   

அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் முதிராக் குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 நாளே ஆனா குழந்தை ஒன்றுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.   


No comments