முள்ளிவாய்க்கால் சுடரேற்றியவர்களிற்கு பிணையில்லை!

 


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பான சமர்ப்பணங்களை எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் பசீல் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் வரை சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா தொற்றுநிலையை காரணங்காட்டி சந்தேகநபர்கள் எவரும் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவில்லை.


No comments