இலங்கையில் டெல்டா உறுதியானது!இலங்கையில் 53 வயதான பெண்ணொருவருக்கு கொவிட்-19, டெல்டா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டெல்டா உறுதிப்படுத்தப்பட்ட மாதிவவெலயைச் சேர்ந்த பெண், அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே நாட்டில் நேற்று(21) பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையில், வாகன விபத்துகளினால் 11 மரணங்கள் பதிவானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமை வருத்ததுக்குரியது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், வாகன விபத்துகள் தொடர்பில் அவதானத்துடன், பொதுமக்கள் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


No comments