வியாழேந்திரன் வீட்டுக்கு முன் கொலை!! பார்வையிட்ட நீதிபதி!!


மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கி சூடு இடம்பெற்ற சூழலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதிபதி ஏ.சி.ரிஸ்வானினால் இன்று செவ்வாய்கிழமை காலை 11.00 மணியில் பார்வையிடப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதவானால் இச் சூழல் அவதானிப்பு இடம்பெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு ஊரணியை சேர்ந்த 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியடசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments