பேஸ்புக்கிற்கு உள்ளே:பிள்ளையான் வெளியே?பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு​ சொத்துக்கள் இருக்கின்றன. அரசாங்கத்துக்கு ஆதரவானவர், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றார். ஆனால், பேஸ்புக்கில் ஏதாவது எழுத்தியதற்காக, கடந்த ஒரு வருடத்தில் 100க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். பிள்ளையானுக்கு பிணை வழங்கியதைப் போல, பிள்ளைகளுக்கும் பிணை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவும் என கோரியுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான  ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தன், பிணையில் விடுக்கப்பட்டார். அத்துடன், அவருக்கு எதிரான வழக்கும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments