சுமந்திரன் விடுவித்தவர்களை காண்பிக்கட்டும்:சவால்!

 


கடந்த நல்லாட்சி அரசில் எந்தவொரு அரசியல் கைதியும் பொதுமன்னிப்பளித்து விடுவிக்கப்படவில்லையென குரல் அற்றவர்களது குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகள் பற்றி, கடந்த 11 வருடங்களாக பேசிக்கொண்டிருக்கின்றோம். எதிரணியில் இருக்கும் எங்களுடைய அழுத்தங்களால், 100 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிததுள்ளார்.அத்துடன் பொசன் போயா தினத்தன்று, முடிந்தால் சிலரை விடுதலைச் செய்யுங்கள் எனவும் கோரியுள்ளார்.

இந்நிலையிலேயே நல்லாட்சியில் எந்தவொரு அரசியல் கைதியும் பொதுமன்னிப்பளித்து விடுவிக்கப்படவில்லையென அரசியல் கைதிகளிற்காக குரல் கொடுத்துவரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்டவர்கள் தண்டனை முடிந்தோ அல்லது சொந்த முயற்சியாலோ பிணையிலோ விடுவிக்கப்பட்டுள்ளனர்.முடியுமானால் அவ்வாறு நல்லாட்சியில் விடுவிக்கப்பட்டவர்களது விபரங்களை வெளியிட எம்.ஏ.சுமந்திரனிற்கு சவால்விடுத்துள்ளது.  


No comments