ஊசியை சுருட்டிய அதிகாரிகள்:யாழில் பரிதாபம்!யாழ் மாவட்ட பொதுமக்களுக்கென   அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலர்; தெரிவித்துள்ளார்.

எனினும் இன்று புதன்கிழமை இரவு ஊர்காவல்துறை மற்றும் காரைநகரில் இரவிரவாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதை மருத்துவ அதிகாரிகள் பகிர்ந்திருந்தனர்.

எனினும் அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட தடுப்பூசி வந்தவுடன் நிகழ்ச்சி நிரலின் படி தடுப்பூசி வழங்கப்படும் எனவும் க.மகேசன் தெரிவித்திருந்தார்.

எனவே பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை அடுத்தகட்ட ஊசி கிடைத்தவுடன் அந்த நிகழ்ச்சி நிரலின் படி தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நேற்று மாலையுடன் 32 ஆயிரம் தடுப்பூசிகள் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் மிகுதி தடுப்பூசியும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதும் அரசியல் தலையீட்டினால் ஊசி விநியோகத்தில் பாரிய முறைகேடுகள் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.

முன்கள பணியாளர்களை விடுத்து  யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும்  சில தனியார் நிறுவன ஊழியர்கள் என பட்டியலில் மாற்றங்கள் கடைசி நேரத்தில் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே யாழில் முதல் நாள் 2 ஆயிரத்து 948 பேருக்கும்;,இரண்டாவது நாள்  6000 பேருக்கும் மூன்றாம் நாள் நேற்று 13 ஆயிரத்து 914 பேருமாகமூன்று நாளும்  22862 பேருக்கு வழங்க்ப்பட்ட நிலையில் இன்று அரைநாளில் (மதியத்துடன்) 27138  பேருக்கு ஊசி வழங்கப்பட்டதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.
No comments