மூழ்கிய கப்பல்:மீனவர்கள் பற்றி ஆராயப்படுகிறதாம்!

 


இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எகஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவல் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பாக இலங்கை அரசு திருட்டு மௌனம் காத்துவருகின்றது.

இதனிடையே நீர்கொழும்பு பிரதேச மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. 

நீர்கொழும்பு மாநாகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகர, நீர்கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா , கடற்றொழில் அமைச்சின் செயலாளர், திணைக்கள பணிப்பாளர்கள் , அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு,சூழல் பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முழ்கிய கப்பல் எச்சங்கள் வடக்கு கடற்பரப்பு வரை நீடித்துள்ள நிலையில் இன்றைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.No comments