பயணத் தடையிலும் திருட்டு! மூவர் கைது!


பயணத் தடை நேரங்களில் யாழ். நகரில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணத் தடை நேரங்களில் யாழ் நகரப் பகுதிகளில் ஆனைப்பந்தி, நாவலர் வீதி, கோவில் வீதி பகுதிகளில் உள்ள மூடப்பட்டிருந்த கடைகளை உடைத்து தொலைக்காட்சிப் பெட்டிகள், சைக்கிள்கள், மின்சாதனப் பொருட்கள், விலை உயர்ந்த  உணவுப் பொருட்கள், பிஸ்கட் வகைகள், பால் பைக்கற்றுக்கள் எனப் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட நிலையில் குறித்த கடைகளின் உரிமையாளர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், விசாரணையின் அடிப்படையில்  3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர், சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், 20 தொடக்கம் 30 வயதுகளை உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments