இலங்கையில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு?

 


இலங்கையில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

இனிவரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என பரவும் செய்திகளில் உண்மை இல்லை என இராணுவதளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மாத காலம் நாடு தழுவிய ரீதியில் அமுலிருந்து பயணத்தடை நேற்று அதிகாலை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments