அழுத்தம்:கோத்தா கைவிட்டார்!
தெற்கில் கோத்தா அரசிற்கு எதிராக மக்கள் திரண்டுவருகின்ற நிலையில் சங்கடத்தை தோற்றுவிக்கும் கூட்டமைப்பின் சந்திப்பினை ஜனாதிபதி தவிர்த்ததாக கூறப்படுகின்றது.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்தரையாடும் நோக்கில், ஜனாதிபதியுடன் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு சந்திப்பு இடம்பெறவிருந்தது.

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னராக கோத்தாவுடனான முதலாவது சந்திப்பாக இது பார்க்கப்பட்ட நிலையில் இறுதியில் இரத்தாகியுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, இதன்போது கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும் இதற்கான காரணம் தமக்கு அறிவிக்கப்படவில்லை என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments