தமிழகத்திலுள்ள ஈழ ஏதிலி கைதிகளிற்கு ஆதரவாக போராட்டம்!இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளை விடுவிக்க கோரி தொடரும் அவர்களது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் அவர்களது குடும்பங்களும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடிவரும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நவாலியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி கைதிகளது குடும்பங்களை சேர்ந்தவர்களே தற்போதைய கொவிட் தனிமைப்படுத்தலை கருத்தில் கொண்டு தமது போராட்டத்தை வதிவிடத்தில் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து தப்பித்து சென்ற ஈழ ஏதிலிகள் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த எட்டுவருடங்களிற்கு மேலாக வழக்குகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமது விடுதலையினை வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் அவர்கள் குதித்துள்ள நிலையில் ஆதரவாக குடும்பங்களும் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. No comments