சுமந்திரனிற்கு வந்தது தக்காளி சோஸ் அல்ல:இரத்தமே தான்!ஏறினால் ஹெலி இறங்கினால் அதிரடிப்படை என்று இருந்த மனுசனை விளக்கேற்றி அஞ்சலி செய்ய வைத்து மூட்டை தூக்க வைத்து இளநீர் குடிக்க வைத்தது "தமிழ் தேசிய அரசியல்" என எம்.ஏ.சுமந்திரனை நையாண்டி  செய்ய தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

கிளிநொச்சியில் முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு தனது பஜீரோவில் சென்று நிவாரணம் வழங்கும் எம்.ஏ.சுமந்திரனின் புகைப்படங்கள் இன்று  வைரலாகியுள்ளது.

தனது செல்பிகளால் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவர் செல்வராசா கஜேந்திரன்.

தனி ஒரு ஆளாக ஆர்ப்பாட்டத்திற்கு சென்றாலும்  தனது செல்பியை எங்கும் வெளியிட்டுவருவது கஜேந்திரனின் பாணி.

ஆனாலும் அதனை நையாண்டி செய்வது எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அல்லக்கைகளது பாரம்பரியமாகும்.

இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னராக ஞான உபதேசம் பெற்றுள்ள எம்.ஏ.சுமந்திரன் தற்போது கப்டன் பண்டிதரிற்கு விளக்கேற்றி அஞ்சலி செய்ய வைத்தும் மூட்டை தூக்க வைத்தும் இளநீர் குடிக்க வைத்தது "தமிழ் தேசிய அரசியல்" என கஜேந்திரனிற்கு போட்டியாக நெட்டிசன்களால் நையாண்டிக்குள்ளாகியுள்ளார்.


No comments