உள்ளுர் விசாரணை:ஆமிக்கு தண்டனையாம்!மட்டக்களப்பு  ஏறாவூரில் நேற்று பயணக்கட்டுப்பாட்டை மீறி நடமாடியவர்களை பிடித்து இலங்கை இராணுவம் முழங்காலில் இருத்தியமை இனத்துவேசமாக பார்க்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அது தொடர்பில்  குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர்  கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் விசாரணைகள் முடிந்ததும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments