முடக்கவேண்டுமெனின் முடக்குவோம்:608மீதியாம்!யாழ்ப்பாணத்திற்கென ஒதுக்கப்பட்ட 50ஆயிரம் ஊசிகளில் இன்னமும் மீதமிருப்பது 608 தடுப்பூசிகளேயென ஒருவாறு சுகாதார திணைக்களம் கணக்கு காட்டியுள்ளது.

தன்னிச்சையாக ஊசிகளை போட்டதான குற்றச்சாட்டுக்களையடுத்து தற்போது திய கணக்கினை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ளார்.

இதனிடையே தனியாருக்கு ஊசி போடுவதை நிறுத்த கொழும்பிலிருந்து அறிவுறுத்தல் வந்திருப்பதாக தெரிவித்ததன் மூலம் ஏற்கனவே தனியாருக்கு தன்னிச்சையாக ஊசி போடப்பட்டதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனிடையே கோவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்த இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அதை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா புதிய கண்டுபிடிப்பை தெரிவித்துள்ளார்.

நாடாளவிய முடக்கத்தை ஜுன் கடைசி வரை நீடிக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


No comments