இலங்கை தொழிலாளர்களை கைவிட்ட கோத்தா அரசு!


வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த இலங்கைத் தொழிலாளர்கள் உயிழந்துள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை 4 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர், அவர்களில் 4 ஆயிரத்து 600 பேர் குணமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமான் மற்றும் கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு உட்பட 16 நாடுகளில் இருந்து உயிரிழப்புகள் மற்றும் தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்த அனைத்து இலங்கையர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு பணிக்குச் சென்றதாக பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments