நிமலின் தாயாருக்கு கனடாவில் யாழ்.ஊடக அமையம் அஞ்சலி!

 

தமிழ் தேசியப்பரப்பில் முதன் முதலாக ஊடக சுதந்திரத்திற்காக காவு கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் தாயார் லில்லி திரேஸ் மயில்வாகனத்திற்கு யாழ்.ஊடக அமையத்தின் பிரதிநிதிகள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு அச்சங்காரணமாக அடைக்கலம் புகுந்துள்ள கனடா நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் இறைவனடி சேர்ந்திருந்தார்.

அவரது புகழுடல் நேற்று புதன்கிழமை மாலை  5 மணி முதல் 8 மணிவரையும் இன்று வியாழக்கிழமை காலை9மணியில் இருந்து11 மணிவரையிலும் அன்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு12 மணிக்கு திருப்பலி சென்.அன்ட்ரூ தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.அன்னாரது ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தித்ததுடன் யாழ்.ஊடக அமையத்தின் சர்வதேச பிரிவின் கனடா கிளை உறுப்பினர்கள் நேரில் மலரஞ்சலி செலுத்தி தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.அத்துடன் நிமலின்   குடும்பத்தவர்களது துயரிலும் நிமலின் நண்பர்களாக இணைந்து கொண்டனர்.


No comments