பி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்?தற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்பில் வெளியிட்டுவருகின்றது.

அதன் அண்மைய கண்டுபிடிப்பாக முல்லைதீவிலிருந்து சிங்களவர்கள் ஆயுதங்களுடன் தமிழகம் வருவதான பிரச்சாரமாக அமைந்துள்ளது.

அதனது அண்மைய செய்தியில் இலங்கையில் இருந்து ஆயுததாரிகள் சிலர் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி இதன் பின்னணியைக் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 12ஆம் தேதி வெளிநாட்டு செல்பேசி எண்ணில் இருந்து இலங்கையில் இருந்து பேசுவதாகக் கூறி மதுரை திடீர் நகர காவல் நிலையத்துக்கு அழைப்பு வந்தது. அதில், இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த நசீர், அமீன், பராகத்துல்லா ஆகியோர் ஏகே 47 ரக துப்பாக்கிகளை இலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு மீன்பிடி படகில் இந்தியா வருவதாக மறுமுனையில் பேசிய நபர் கூறினார்.

பின்னர் மீண்டும் சில மணி நேரம் கழித்து அதே நபர் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு, இந்தியாவுக்கு வரும் மூவருக்கும் அந்த ஆயுதங்களை கொடுத்தது இலங்கை கடற்படை அதிகாரிகள்தான் என்றும் கூறி இணைப்பை துண்டித்தார்.

மிகவும் தீவிரமாக கருதப்பட வேண்டிய தகவல் இது என்பதால் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர காவல் படை, மத்திய உளவுத்துறையை தமிழ்நாடு காவல்துறையினர் எச்சரித்தனர்.

தீவிரவாத செயல்பாடுகள் மீது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அதேபோன்ற நடவடிக்கைகளை அனைத்து புலனாய்வுத்துறைகளும் பின்பற்றின. இந்திய உளவுத்துறை மூலம் இலங்கையில் உள்ள கடற்படைக்கும் இது பற்றிய தகவல் பகிரப்பட்டது.

ஆயுத கடத்தலில் இலங்கை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற விசாரணையும் முடுக்கி விடப்பட்டது என்று உள்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஏதேனும் எச்சரிக்கை குறிப்பு இந்தியாவில் இருந்து வந்ததா என்று கேட்கப்பட்டது. ஆனால், அத்தகைய தகவல் தங்களுக்கு வரவில்லை என்று இந்திய தூதரகம் கூறியது.

மறுபுறம் தமிழ்நாட்டுக்கு நேரடியாக வராமல் கேரளா வழியாக ஆயுதங்கள் கடத்தப்பட்டு வரலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கேரள காவல்துறையும் எச்சரிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் எல்லை மாவட்டங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் இலங்கை காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் டிஐஜி அஜித ரோஹண, இந்த எச்சரிக்கை தகவல் தொடர்பாக இன்டர்போல் காவல்துறையிடம் மேலதிக குறிப்புகள் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக, இரண்டு சிங்கள மொழி பேரும் இலங்கையர்கள் மற்றும் 23 பேர் தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக படகில் வந்து பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள தொழில்பேட்டையில் தங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அவர்களை தமிழ்நாடு க்யூ பிரிவு காவல்துறையினர் கடந்த 10ஆம் தேதி கைது செய்தனர்.

அவர்கள் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மூன்று ஃபைபர் படகுகள் மூலம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாக தெரிய வந்ததால், அவர்களுக்கும் மதுரை காவல் நிலையத்துக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.

பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் காவல்துறையின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இதற்கிடையே, தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத செயல்பாடுகளை கண்காணிக்கும் க்யூ பிரிவினர், மதுரை காவல் நிலையத்துக்கு கடந்த 12ஆம் தேதி வந்த மர்ம அழைப்புகளின் பின்னணியை விசாரித்தனர்.

அதில், வெளிநாட்டு செல்பேசி எண்ணில் இருந்து காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசிய நபர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

பனைக்குளத்தைச் சேர்ந்த தாஜுதீன், பஹருல் அமீன், அன்வர் ராஜா, ஷேக் அலாவுதீன், {ஹசேன் ஆகியோர் அதே பகுதியில் உள்ள ஐந்து சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு தகர கொட்டகை போட்டுள்ளதாகவும், இது பற்றி நூருல் அமீன் மூலம் உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதாகவும் தெரிய வந்ததென கூறியுள்ளது.

முல்லைதீவிலிருந்து வந்தவர்கள் ,சிங்களவர்களென இலங்கை தொடர்பானன அறிவற்றவர்களை முன்னிறுத்தி செய்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments