யாழ்.நகரில் பாம்புகள் படையெடுப்பு?

 மிக நீண்ட காலமாக மண் அகழ்வு செய்யப்படாமல் இருந்த யாழ்.நகர் பகுதி பிரதான வெள்ள வடிகால்கள் தற்போது மிகுந்த சிரமத்தின் மத்தியில் தூர்வாரப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஸ்ரான்லி வீதிக்கு அண்மையில் செல்லுகின்ற பிரதான வெள்ள வடிகால். கொடிய விச பாம்புகள் நிறையப்பெற்ற குறித்த வடிகாலும் தற்போது தூர்வாரப்படுகின்றது.

குறித்த வடிகாலினை வெட்டி திறந்த போது வடிகாலினுள் பெருமளவான விச பாம்புகள் அங்கும் இங்கும் ஒடித்திருந்தன என தெரிவித்துள்ளார் உறுப்பினர் பார்த்தீபன்.

பொதுவாக வடிகால்கள் தூர்வாருதல் என்பது கடினமிக்க பணி அதிலும் கொடிய விச பாம்புகளுடன் போராடி உயிர் அச்சுறுத்தலுடன் வடிகாலினை தூய்மைப்படுத்துகின்ற யாழ்.மாநகர பணியாளர்களது பணி போற்றுதற்குரியதெனவும் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.


No comments