காட்டுத்தர்பாரில் இலங்கை இராணுவமும் காவல்துறையும்!இலங்கையில் அதிகாரத்தை தம் வசம் வைத்துள்ள இலங்கை படையினர் மற்றும் காவல்துறையினர் ஆட்சியாளர்களது விருப்பத்திற்கேற்ப கைதுகளையும் தண்டனைகளையும் மனம்போல அரங்கேற்றிவருகின்றனர்.

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் ஆர்வலர் கனிஸ்கா டி லானெரோலை போலீசார் கைது செய்துள்ளனர்

இன்னொரு புறம் அம்பாறை மருதமுனை பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினர் தண்டனை வழங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் மருதமுனை பகுதியில் வீதிகளில் நடமாடியவர்களை இராணுவத்தினர் பிடித்து அவர்களை ,தலைக்கு மேலே கைகளை தூக்கியவாறு முழங்காலில் இருக்க வைத்து தண்டனை வழங்கியுள்ளனர். 

இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாட்டை இனரீதியான நோக்கிலானதென பெரும்பாலானோர் அதற்கு தமது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.


No comments