முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:சிறை நீடிப்புமட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில், மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய 10 பேரையும், இம்மாதம் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு,  வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு, நேற்று (03) மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

கிரான் கடற்கரையில் நினைவேந்தலை அனுஷ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் மற்றும் 2 பெண்கள் உட்பட 9 பேரும் கல்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

No comments