மூன்று இலட்சம் வேண்டுமாம்:யாழ்.மாவட்ட செயலர்!சுகாதாரப் பிரிவினருடைய கணக்கின்படி யாழ்.மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவையாகவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் எவ்வளவு தடுப்பூசி வழங்குகின்றதோ அதனை உடனடியாகப் பொதுமக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்;

இதனிடையே யாழ்.மாவட்டத்தில் முதலாம் கட்டத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கிடைத்த 50 ஆயிரம் தடுப்பூசிகளில் அனைத்து தடுப்பூசிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments