திபெத்துக்குள் புகுந்தது சீனாவின் புல்லட் தொடரூந்து!

 


சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் முதல் புல்லட் தொடரூந்து சேவை தொடங்கியுள்ளது. திபெத்தின் தலைநகரான லாஸா நகரையும், எல்லை நகரமான யிங்சியையும் இணைக்கும் வகையில், சுமார் 435.5 கிமீ தொலைவிலான புல்லட் தொடரூந்து சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.

சீன நாட்டின் ஆளும் கட்சியாக இருந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டம் ஜூலை 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங், " வர்த்தக நகரான சிசுவான் - திபெத் யிங்சி நகரினை இணைக்கும் புல்லட் தொடரூந்து திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யிங்சி நகரம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள பகுதி ஆகும். திபெத்தில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எல்லைப்பகுதிகளில் உட்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

சீனாவின் சிசுவான் மாகாணத்தின் தலைநகர் செங் டூ நகரில் இருந்து தொடங்கும் இந்த தொடரூந்து பாதை, யான் மற்றும் காமடோ நகர் வழியாக திபெத்திற்குள் நுழைந்து லாஸா வரை செல்கிறது. இதனால் செங் டூ - லாஸா பயண நேரம் 48 மணிநேரத்தில் இருந்து 13 மணிநேரமாக குறைந்துள்ளது.

No comments