முதல் கட்டமாக 800கோடி?

 


இலங்கைக்கு அருகில் எரிந்தபின் மூழ்கிய கப்பல் மூலம் தனது கடன்களை அடைத்துவிட மும்முரமாகியிருக்கின்றது கோத்தா அரசு.

முதல்கட்டமாக அவ்வகையில் 800 கோடியினை(40 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமானது) நட்டஈடாக இலங்கை அரசு  கோரியுள்ளது.

இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு வட மேற்கில் 18 கிலோமீற்றர் தொலைவில் துறைமுக அனுமதிக்காக காத்திருந்த கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர செலவு செய்யப்பட்டதாக கணிக்கப்பட்ட தொகையில் 40 மில்லியன் டொலர்களை கப்பலின் உரிமையாளரான க்ஸ்பிரெஸ் பீடர்ஸ் நிறுவனத்திடம் முதல் கட்டமாக இலங்கை அரசு கோரியுள்ளது.

இத்தொகையை இலங்கை சட்டமா அதிபர் சிங்கப்பூரின் க்ஸ் பிரெஸ் பீடர்ஸிடம் கோரியுள்ளதாக கடல் சூழல் பாதுகாப்பு நிர்வாக தலைமை அதிகாரி தர்சினி லகண்டபுர தெரிவித்துளார்.  தாம் இன்னமும் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக மதிப்பீடு செய்து வருவதாகவும், வைகாசி 20 முதல் ஆனி 1ம் திகதி வரையான காலப்பகுதியை கருத்தில் கொண்டு முதல் கட்ட நஸ்டஈடாக இத்தொகையை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் 

இதனிடையே கப்பலில் இருந்து எண்ணை மற்றும் ரசாயண பொருட்கள் கசிவால் கடல்  உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ள அதேவேளை எந்தவித எண்ணை கசிவுகளும் ஏற்படவில்லை என இலங்கையும்,கப்பல் நிறுவனமும் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments