பலத்த காற்று பப்பாசிச் செய்கை முற்றாக அழிந்தது


வவுனியா, அராபத் நகர் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) காற்றுடன் கூடிய கனமழை மழை பெய்தது.

இந்நிலையில், வவுனியா அரபாத் நகர் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த ஒரு ஏக்கர் அளவிலான பப்பாசிச் செய்கையே முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இலட்சம் ரூபாய் அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.


No comments