மன்னாரில் நினைவேந்தப்பட்டது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்!

முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம்

செவ்வாய்க்கிழமை (18) அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது. -தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது. 

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத தலைவர்கள்,மன்னார் நகர முதல்வர் , பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை அணிவித்து சுடரேற்றி , மலர் துர்வி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து உப்புக்கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments