மன்னாரில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு


மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

மன்னார் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை (24) மாலை தாழ்வுபாடு கடற்கரை பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை குறித்த பகுதிக்குச் சென்ற சட்ட வைத்திய அதிகாரி சடலத்தை பார்வையிட்டதோடு, சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments