யாழ்.மாநகரும் தலை சாய்த்தது!


இனஅழிப்பிற்குள்ளான மக்களிற்கு யாழ்.மாநகரமும் தனது அஞ்சலிகளை செலுத்திக்கொண்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.மாநகர சபையில் அனுஷ்ட்டிக்கபட்டுள்ளது. 

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் பிரதி முதல்வர் து. ஈசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர் கருத்து தெரிவிக்கையில் , உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவர்களது இழப்புக்கு நீதியை பெற்று கொடுப்பதாகும். நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட நாம் உறுதி பூணுவோம் என தெரிவித்தார்.

இதனிடையே இனஅழிப்பிற்கான நீதி கோரும் பாதுகாப்பு முகக்கவசங்களை பலரும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
No comments