பிரான்ஸ் - பெல்ஜிய எல்லைக் கல்லை மாற்றியமைந்த விவசாயியால் பரபரப்பு


பெல்ஜியத்தில் விவசாயி ஒருவரின் கவனக்குறைவால் பெல்ஜியம் - பிரான்ஸ் நாடுகளுக்கிடையோன எல்லைக் கல்லை நகர்த்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையேயான எல்லையைக் குறிக்கும் கல்லை அவர் 2.29 மீற்றர் (7.5 அடி) நகர்த்தி வைத்துள்ளார்.

உள்ளூர் வரறாற்று ஆர்வலர் ஒருவர் அப்பகுதியால் நடந்துகொண்டிருந்த போது, இக்கல் நகர்ந்துள்ளதை அவதானித்தார்.

பெல்ஜிய விவசாயி தனது உழவூர்த்தியில் செல்வதற்கு இக்கல் தடையாக இருந்ததால் கோபமடைந்து அக்கல்லை பிரஞ்சு எல்லைக்குள் நகர்த்தியிருந்தார்.

குறித்த விவசாயி பெல்லியத்தின் எல்லையைப் பொிதாகவும்,  பிரான்ஸ் எல்லையை சிறிதாகவும் மாற்றினார்.

பிரான்சிற்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான எல்லை 620 கி.மீ (390 மைல்) வரை நீண்டுள்ளது. இது வாட்டர்லூவில் நெப்போலியன் தோல்வியடைவதற்கு முன்னர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 1820 இல் கையெழுத்திடப்பட்ட கோர்ட்ரிக் ஒப்பந்தத்தின் கீழ் முறையாக நிறுவப்பட்டது. இந்த கல் 1819 ஆம் ஆண்டிலிருந்து, எல்லை முதன் முதலில் குறிக்கப்பட்டது.

இச்சம்பவம் சர்வதேச சலசலப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக, எல்லையின் இருபுறமும் புன்னகையுடன் கையாளப்பட்டது.

நான் மகிழ்ச்சியாக இருந்தேன், என் நகரம் பெரியது" என்று பெல்ஜிய மேயர் ஒரு சிரிப்புடன் கூறினார். ஆனால் விவசாயியின் செயலை  அவர் ஏற்கவில்லை.

ஒரு புதிய எல்லைப் போரை நாம் தவிர்க்க முடியும் என்று பிரெஞ்சு எல்லைக் கிராமத்தின் மேயர் ஆரேலி வெலோனெக் வேடிக்கையாகக் கூறினார்.

உள்ளூர் பெல்ஜிய அதிகாரிகள் விவசாயியை தொடர்பு கொண்டு எல்லைக் கல்லை அதன் உரிய இடத்திற்கு திருப்பி நாட்டுமாறு கேட்டுக் கொண்டனர். அது நடக்கவில்லை என்றால் அவர் மீது பெல்ஜிய வெளியுறவு அமைச்சகத்தினால் வழக்குத் தொடரப்படும் கூறியுள்ளனர்.

அத்துடன் 1930 ஆண்டு முதல் செயலற்ற நிலையில் இருக்கும் பிராங்கோ-பெல்ஜிய எல்லை ஆணையத்தை வரவழைக்க வேண்டி ஏற்படும். விவசாயி இணங்கத் தவறினால் குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டார்.

விவசாயி எல்லாவற்றும் இணங்கினால் அவருக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது. நாங்கள் இந்த பிரச்சினையை இணக்கமாக தீர்ப்போம் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.No comments