இங்கிலாந்தில் மே 17 முதல் 3 ஆம் கட்ட தளர்வுகள்

இங்கிலாந்தில் ஊரடங்கின் அடுத்த கட்ட தளர்வை பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவிக்க உள்ள நிலையில், எச்சரிக்கையுடன் மக்கள் பரஸ்பரம் கட்டித்

தழுவவும், மதுச்சாலைகளில் வாடிக்கையாளர்களுக்கு மது விநியோகம் நடத்தவும் அனுமதி அளித்துள்ளார்.

பல மாதங்கள் நீண்ட ஊரடங்கை நான்கு கட்டங்களாக விலக்கும் அறிவிப்பை கடந்த பிப்ரவரியில் போரிஸ் ஜான்சன் வெளியிட்டார்.

அதிவிரைவு தடுப்பூசி திட்டத்தால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பும் இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவதால் இந்த முடிவை அவர் எடுத்தார்.

அதன்படி வரும் 17 ஆம் தேதி முதல் பல மாதங்களுக்குப் பிறகு 6 பேர் அல்லது இரண்டு குடும்பத்தினர் வீடுகளிலோ, விடுதிகளிலோ சந்தித்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

திரையரங்குகள், பப்கள்,உணவு விடுதிகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம்.

இந்த தளர்வுகள் இங்கிலாந்துக்கு மட்டுமே பொருந்தும். ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் நிர்வாகங்கள் அவரவர் தேவைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கலாம்.

அடுத்த மே 17 திங்கட்கிழமை வரவிருக்கும் மாற்றங்கள்

 • வெளிப்புறங்களில் குழுக்களாக (30பேர்) சந்திக்கலாம்.

 • இரண்டு வீட்டைச் சேர்ந்த 6 பேர் வீட்டில் சந்திக்கலாம்.

 • இரண்டு வீட்டைச் சேர்ந்த 6 பேர் ஒரு வீட்டில் தங்கலாம்.

 • மது அருந்தகங்கள், உணவகங்களின் உட்புறங்கள் திறக்கலாம்.

 • வயது வந்தவர்களுக்கான உட்புற விளையாட்டுகள், பயிற்சிகளை மீண்டும் திறக்கலாம்.

 • உட்புற பொழுதுபோக்குகளான அருங்காட்சியகங்கள், நாடக அரங்குகள், திரைப்படை அரங்குகள், சூதாட்ட விடுதிகள், உடற்பயிற்சி நிலையங்கள், விளையாட்டுக்கூடங்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள் மீண்டும் திறக்கப்படலாம்.

 • நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய நிகழ்வுகளை மீண்டும் தொடக்கம் செய்யப்படலாம் ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் வரம்புகள் மட்டுப்படுத்தப்படும்.

 • வெளிப்புற அரங்குகள் மற்றும் சினிமாக்கள் போன்ற வெளிப்புற பொழுதுபோக்குகளை திறக்க முடியும்.

 • தங்குமிட விடுதிகள் மீண்டும் திறக்கப்படலாம்.

 • கொரோனா தொற்று குறைந்த (பச்பை பட்டியல்) வெளிநாடுகளில் விடுமுறைகள் அனுமதிக்கப்படுகின்றன.

 • 30 பேர் வரையில் திருமண நிகழ்வு மற்றும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளலாம்.No comments