சிங்கள சிப்பாய்கள் இருவர் சாவு!யாழ்ப்பாணத்தில் இருவேறு சந்தரப்பங்களில் படையினர் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை குறிகாட்டுவான் இறங்கு துறையில் பாதை திருத்த பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். 

குறிகாட்டுவான் - நயினாதீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும்  வீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பாதை திருத்த பணியில் ஈடுபட்டிருந்த வேளை சிப்பாய் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அதேபோன்றே யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப்படையை சேர்ந்த சிப்பாய் ஒருவர் விடுமுறைக்காக வீடு சென்று பணிக்குத் திரும்பிய சமயம் பேரூந்து விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

ஏ.எம்.என்.குணசேகரா,  வயது 33 என்னும் வெலிமடை பகுதியைச் சேர்ந்த விமானப்படை சிப்பாயே உயிரிழந்தவராவார்.

விடுமுறையில் கண்டிக்கு சென்ற படையினரை  கடந்த 19ஆம் திகதி  யாழிற்கு கடமைக்கு   ஏற்றிவந்த பேரூந்து விபத்திற்குள்ளானதையடுத்து விமானப்படை சிப்பாய் தூக்கி வீதியில் வீசப்பட்டுள்ளார்.

வீதியில் வீசப்பட்ட விமானப்படை சிப்பாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


No comments