கொரோனாவாவது முடக்கமாவது :வருகின்றது கஞ்சா!கொரோனா தொற்று காரணமாக முடக்க நிலை பேணப்பட்டுவருகின்ற போதும் கஞ்சா கடத்தல் ஓய்ந்தபாடாக இல்லை.

மாதகல் புளியந் துறையில் 52 மப எடை மதிக்கத்தக்க கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது .கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமரத்திலிருந்து 2  மூட்டை கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்தி கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது .

மீட்கப்பட்ட 26 சிறிய பொதிகள் அடங்கிய  2 கஞ்சா பொதி வட்டுகோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

No comments