கர்ப்பிணிகளிற்கு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை!சாவகச்சேரி வைத்திய சாலையில் மூன்று கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.  

மேலும் தெரிவிக்கையில் ,வைத்திய சாலையில் ஏற்கனவே இரண்டு கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , நேற்றைய தினமும் ஒரு கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

வைத்திய சாலையில் போதிய வைத்தியர்கள் இல்லாத போதிலும் , சுழற்சி முறையில் வைத்தியர்கள் கடமை புரிந்து வருகின்றனர். தொற்றுக்கு உள்ளானவர்கள் கர்ப்பிணி பெண்கள் என்பதனால் கூடிய கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.   

மேலதிக சிகிச்சை அவர்களுக்கு வழங்கபப்ட்ட வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் அவர்களை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு  அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

No comments