துஸ்பிரயோகம்:வர்த்தக நிலையம் பூட்டு!அரசினால் வழங்கப்பட்ட அனுமதியை துஸ்பிரயோகம் செய்த  வர்த்தக நிலையத்திற்கு அனுமதி இரத்துச் செய்யப்பட்டதோடு, பயணக் கட்டுப்பாடு நேரம் அனுமதியின்றி பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களும் வவுனியாவில் மூடப்பட்டது.

மன்னார் வீதி  வேப்பங்குளம் பகுதியில் இயங்கும் சுப்பர்மார்க்கட் ஒன்றிற்கு பயணக் கட்டுப்பாட்டு நேரம் வீடு வீடாக கொண்டு சென்று பொருட்களை விநியோகிப்பதற்கு பிரதேச செயலகத்தினால் அனுமதி வழங்கப்பட்டது.  ஆனால் குறித்த வர்த்தக நிலையம் வழங்கப்பட்ட அனுமதியை மீறி வர்த்தக நிலையத்தில் பொதுமக்களை ஒன்று கூட்டி விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

 இதனால் குறித்த வர்த்தக நிலையத்திற்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம் இரத்துச் செய்யப்பட்டதோடு குறித்த வர்த்தக நிலையத்தை மூடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


No comments