பிந்தி வந்தார் நாமல்:விரைந்து வழங்க ஆலோசனை!

 


யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பு ஊசிகளை விநியோகிக்கும் பணியில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்த இலங்கை அமைச்சர் நாமல்ராஜபக்ஸ மதியத்தின் பின்னரே இணைந்து கொண்டார்.

காலை ஊசி மருந்துகளை கையளிக்கும் நிகழ்வில் நாமல் ராஜபக்ச கலந்து கொள்வார் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி அறிவித்திருந்தார்.

எனினும் காலை நிகழ்வில் நாமல் பங்கெடுக்காத நிலையில் வடக்கு ஆளுநர் பங்கெடுப்புடன் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிற்பகல் 2.00மணியளவில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நாமல் கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்களிற்கு நேரில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்திற்கென அனுப்பப்பட்ட ஊசிகளை தாமதிக்காது காத்திருக்காது விநியோகிக்க நாமல் ராஜபக்ஸ ஆலோசனை தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. 
No comments