படைகள் பில்டப் ஒருபுறம்:கொரோனா இன்னொருபுறம்!

 வடபுலம் யாழ்ப்பாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துகின்றனரோ இல்லையோ தமது படை பலத்தில் புதிய புதிய அணிகளை களமிறக்கி படம் காட்ட இராணுவ தலைமை பின்னிற்கவில்லை. 

ஏற்கனவே கொரோனாவை துரத்திப்பிடிக்க பெண் படையினரை கும்பலமாக மோட்டார் சைக்கிளில் அலைய விட்டுள்ள இலங்கை இராணுவ தலைமை இன்றுபயணக்கட்டுப்பாட்டு காலத்தில் நடமாடுவோரை கண்காணிக்க பொலிஸாருடன் இணைந்து  விமானப்படையின்  ட்ரோன் கமரா கண்காணிப்பு பிரிவை இன்று யாழில் ஆரம்பித்துள்ளது.  

இதன்மூலம்  யாழ்ப்பாண நகரம் , நல்லூர் ஆலயம் மற்றும் யாழ் நகரப்  பொது இடங்களில்  பயணக் கட்டுப்பாடுகளை மீறி நடமாடுவோர்  கைதுசெய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்  ட்ரோன் கமராவை இயக்குபவர் கண் வீச்செல்லையினுள் நடமாடுபவர்களை யாழில் கண்டறிய இத்தகைய பில்டப் தேவையாவென கிழித்து தொங்கவிடுகின்றனர் நெட்டிசன்கள.ஏற்கனவே கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

தனக்கு கடும் நெஞ்சுவலி என்று அவர் தெரிவித்தமையால் நேற்றைய தினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து இயக்கச்சி கோரோனோ தடுப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்

தப்;பித்தவர் இன்று மாலை வரை கைதாகாத நிலையில் வெறும் கண்காட்சிகளை முன்னிறுத்தி அரசு பில்டப் கொடுப்பதும் அதனை ஊடகங்கள் தூக்கி கொண்டாடுவதுமாக சூழல் உள்ளது. 


No comments