சாணப்புகை:கடதாசி சவப்பெட்டி:தூக்கியடிக்கும் கூத்து!

 




கொரோனாவை வைத்து ஆளாளுக்கு கூத்துக்களை அரங்கேற்றுவது இலங்கை முதல் இந்தியா வரை நீள்கிறது.

ஏற்கனவே இலங்கையில் பாணி மருந்து,புனித மண்முட்யை ஆற்றில் விடுதல் என அரசியல் வாதிகள் நகைச்சுவைகளை அரங்கேற்ற தற்போது இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் கொரோனா வைரஸை விரட்ட பாஜக எம்எல்ஏ அபய் பாட்டீல், வீதி வீதியாக சென்று சாணப் புகை போட்டு ஹோமம் நடத்தியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஏற்கனவே மாட்டு சிறுநீர் மருத்துவம் உச்சம் பெற்று இந்தியாவில் இருந்து வருகின்ற நிலையில் அடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்காக இலங்கையில் தெஹிவளை - கல்கிஸை நகர சபையினால் காட்போட் சவப்பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அப்புறப்படுத்தப்பட்ட காகிதம் மற்றும் காட்போட் அட்டைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெட்டிகள் தயாரிக்கப்படுவதாகவும் இதன் ஊடாக,  சவப்பெட்டிகளின் உற்பத்திக்காக வெட்டப்படும் மரங்களை காப்பாற்றுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.




No comments