ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் முன்னேற்றமாம்!ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கும் அதிகமாக நாளாந்தம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என்று  சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால், பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் 14 நாட்கள் நிறைவடைந்ததன் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் குறைவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், முழுமையான பயனைப் பெறுவதற்கு சுகாதார தரப்பினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments